News April 21, 2025
பூசாரி கொலை – கொத்தனார் கைது!

புதுச்சேரி, தவளகுப்பத்தில் கோயில் பூசாரி சுந்தர் என்பவர் மீது தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்ததாக, கொத்தனாரான தமிழரசனை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக தமிழரசன் வாக்குமூலம் அளித்துள்ளார் என கூறப்படுகிறது. அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிந்து, வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 21, 2025
புதுவையில் மத்திய அமைச்சர் சைக்கிள் பேரணி

இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் முக்கியத் திட்டமான, “Fit India-Sundays on Cycle” நிகழ்ச்சியின் துவக்க விழா புதுச்சேரியில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை தொடர்ந்து மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா தலைமையில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சட்டமன்ற தலைவர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
News December 21, 2025
புதுச்சேரி: கூட்டணி குறித்து முதலமைச்சர் பதில்

எதிர்வரும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், பாஜக உடனான கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல் அமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுவதாக தெரிவித்தார்.
மாநில வளர்ச்சி குறித்து பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், மத்திய அமைச்சர் மான்சுவிக் மாண்டியா ஆகியோரிருடன் ஆலோசனை நடத்தப்பட்டது என்றார்.
News December 21, 2025
புதுச்சேரி: ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


