News April 21, 2025
பூக்குழியில் தவறி விழுந்த பக்தர் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் காலனியைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(41). இவர் அப்பகுதியில் ஏப்.17 அன்று நடைபெற்ற ஒரு கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்திய போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் பலத்த தீக்காயமடைந்தார். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
Similar News
News November 3, 2025
விருதுநகர் : நாளை மின்தடை பகுதிகள்

சேத்தூர் பகுதியில் நாளை (நவ. 4) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதே போல சிவகாசி பகுதியிலும் நாளை (நவ. 4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
News November 3, 2025
விருதுநகர்: டிகிரி தகுதி.. 5,810 ரயில்வே காலியிடங்கள்

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் <
News November 3, 2025
சாத்தூர்: கண்மாயில் மூழ்கி ஒருவர் பலி

வெம்பக்கோட்டை அருகே மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (63). கூலி தொழிலாளியான இவர் அருகில் உள்ள கோட்டை கண்மாயில் குளித்துவிட்டு வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவருடைய உறவினர்கள் தேடி வந்தனர். இதற்கிடையில் அவர் கண்மாயில் சடலமாக மிதந்தது தெரியவந்தது. உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


