News March 30, 2024
பூக்களை தூவி பெண் வேட்பாளரை வரவேற்ற கிராம மக்கள்!!

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி இன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, பிக்கிலி, கொல்லப்பட்டி, புதுகரம்பு போன்ற இடங்களில் பொதுமக்களிடத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஊர்மக்கள் பூக்களை தூவி வரவேற்பு கொடுத்தனர்.
Similar News
News August 14, 2025
தருமபுரி: B.Sc, B.C.A, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News August 14, 2025
தருமபுரியில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

தர்மபுரி மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 15) பெண்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன் தலைமையில், மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த முகாம் நடக்கிறது. 12-ஆம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற பெண்கள் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 6374968624 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
News August 14, 2025
மகளிருக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கிராமப்புறப் பெண்களுக்கு, வருகிற ஆகஸ்ட் 18 முதல் 30 நாட்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி தொடங்கவுள்ளது. இந்தப் பயிற்சியில் உணவு மற்றும் அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.மேலும் தகவல்களுக்கு இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை அணுகலாம்.