News December 12, 2025

புஸ்ஸி ஆனந்த் மீது நடவடிக்கை பாயுமா?

image

புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பின்போது, புஸ்ஸி ஆனந்த் டோக்கன் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிக்க கோரினார். இது மீண்டும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், போலீஸ் விதிகளை மீறி புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டிருந்தால், உரிய விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். தவெக வைத்த கோரிக்கைபடியே நிபந்தனைகளை விதித்தோம் என்றும் கூறினார்.

Similar News

News December 15, 2025

பூமியின் மிகப்பெரிய உயிரினங்கள் PHOTOS

image

பூமியில், மனிதர்களுக்கு முன் நீரிலும், நிலத்திலும் பிரம்மாண்டமான உயிரினங்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சாட்சியாக பல்வேறு புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை பூமியில் வாழ்ந்த உயிரினங்களிலேயே மிகப்பெரிய விலங்குகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். இதில் நீல திமிங்கலம் தற்போதும் வாழ்ந்து வருகிறது. அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 15, 2025

பள்ளிகளுக்கு 26 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

2026-ல் பள்ளிகளுக்கான அரசு விடுமுறை பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரையாண்டு விடுமுறைக்கு பின் ஜன.5-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில், ஜன.15, 16, 17-ல் பொங்கல் விடுமுறையாகும். ஜன.26 குடியரசு தினம், பிப்.1 தைப்பூசம், மார்ச் 19 தெலுங்கு வருடப் பிறப்பு, ஏப்.14 தமிழ் புத்தாண்டு, ஜூன் 26 முஹர்ரம், ஆக.15 சுதந்திர தினம் என 26 நாள்கள் விடுமுறை என குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 15, 2025

1 பெண் 10 குழந்தைகளை பெற்றெடுத்தார் ❤️❤️

image

இன்றைய நவீன காலத்தில் ஒரு குழந்தையே போதும் சாமி! என பெற்றோர்கள் நினைக்கும் நிலையில், மத்திய பிரதேசத்தில் 40 வயதான பழங்குடியின பெண் ஒருவர், திருமணமான 18 ஆண்டுகளில் 10-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதுகுறித்து அப்பெண்ணின் கணவர், இது கடவுளின் விருப்பம்!, 5 மகன்கள், 5 மகள்கள் சுக பிரசவத்தில் பிறந்ததாக பெருமிதத்துடன் கூறும் அவர், தனது மனைவிக்கு கருத்தடை செய்ய பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!