News December 9, 2025
புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி எஸ்பி எச்சரிக்கை

புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பில், பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிக்க புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் போலீஸிடம் வலியுறுத்தினர். அதற்கு, உங்களால் பலர் இறந்துள்ளனர், நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லாதீர்கள் என பெண் SP ஈஷா சிங் கறாராக கூற, அங்கிருந்து ஆனந்த் புறப்பட்டார். இதனால் பதற்றம் நீடிக்கும் நிலையில், இன்னும் சற்று நேரத்தில் விஜய் உரையாற்ற உள்ளார்.
Similar News
News December 11, 2025
தவெக பரப்புரையில் வைரலான பெண் எஸ்பிக்கு கெளரவம்

புதுச்சேரி தவெக மக்கள் சந்திப்பின்போது, ஒரு டோக்கனுக்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ஒரு டோக்கனுக்கு இருவரை அனுமதிக்குமாறு புஸ்ஸி ஆனந்த் போலீஸிடம் வலியுறுத்தினார். அதற்கு, <<18511098>>SP ஈஷா சிங்<<>> ஆவேசமாக எச்சரித்தது கவனம் ஈர்த்தது. இந்நிலையில், விஜய் பரப்புரையில் சிறப்பான பாதுகாப்பு அளித்ததற்காக ஈஷா சிங்கிற்கு, அமைச்சர் நமச்சிவாயம் பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கியுள்ளார்.
News December 11, 2025
சென்செக்ஸ் 427 புள்ளிகள் உயர்வு!

இந்திய பங்கு சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. சென்செக்ஸ் 426.86 புள்ளிகள் உயர்ந்து 84,818 புள்ளிகளாக வர்த்தகமானது. US பெடரல் ரிசர்வ் அதன் வட்டி விகிதத்தை 25bps குறைத்த நிலையில், 3 நாள்களாக சரிவில் இருந்த நிப்டி இன்று 140.55 புள்ளிகள் உயர்ந்து 25,898 புள்ளிகளில் வர்த்தகமானது. குறிப்பாக ஆட்டோமொபைல்ஸ், வங்கிகள், IT, ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.
News December 11, 2025
அலர்ட்.. தமிழகத்தில் மழை வெளுக்கப் போகுது

டெல்டா மாவட்டங்களில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் டிச.17-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மேலும், தென் மாவட்ட கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்யுதா?


