News March 8, 2025
புவனகிரி அருகே பொதுமக்களை அச்சுறுத்திய மூவர் கைது

புவனகிரி அருகே கழி, கட்டை கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய மூவர் கைது புவனகிரி காவல் ஆய்வாளர் லட்சுமி உதவி காவல் ஆய்வாளர் லெனின் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கீரப்பாளையம் பகுதியில் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த பிரகாஷ் ராஜ் விக்ரம் செல்வம் ஆகிய மூவர் கையில் கட்டை கழி கத்தியுடன் பொதுமக்களை ஆபாசமாக திட்டி அச்சுறுத்தல் செய்ததால் போலிசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News August 11, 2025
ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி-ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கு பி.எஸ்.சி நர்சிங், பொது நர்சிங் மற்றும் மருத்துவச்சி டிப்ளமோ ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சியில் சேர www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளனர்.
News August 11, 2025
கடலூர்: அழகுக்கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியை பெற www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
News August 10, 2025
கடலூரில் மக்களின் கவனத்திற்கு !

கடலூரில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.