News May 3, 2024
புழல் பகுதியில் நாளை மின்தடை

புழல் துணை மின் நிலையத்தில் உயரழுத்த மின் மாற்றியினை இயக்கத்திற்கு கொண்டு வர தேவையான பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை(மே 3) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை புழல் முழுவதும், சூரப்பட்டு முழுவதும், விநாயகபுரத்தில் ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். மதியம் 2 மணிக்கு மேல் பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
Similar News
News February 13, 2026
சென்னை: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு!

சென்னையில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!
News February 13, 2026
சென்னையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை மாநகராட்சி சார்பில், திரு.வி.க.நகர் மண்டலத்தின் பெரம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் நாளை 14.02.2026 அன்று நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை, மருத்துவ ஆலோசனை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன. ஷேர் பண்ணுங்க
News February 13, 2026
சென்னை மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <


