News April 5, 2025
புலி போல சாதித்த எலி!

கம்போடியாவில் ஒரு எலி உலக சாதனை படைத்திருக்கிறதாம். அதுவும் நிலத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை கண்டுபிடித்து கொடுத்து மனிதர்களின் உயிரை காப்பாற்றி இருக்கிறதாம். ஆப்ரிக்கன் எலியான அதன் பெயர் ரோனின். கம்போடியா ராணுவத்தில் கடந்த 2021 முதல் பணியாற்றி வருகிறது. தற்போது வரை 109 கண்ணிவெடிகளை மோப்பம் பிடித்து அகற்ற உதவி இருக்கிறது ரோனின். சாதிக்க பிறந்த எலி!
Similar News
News April 6, 2025
₹43 லட்சம் கோடியில் பிரம்மாண்ட கட்டடம்!

போயிங் ஆலையை விட 5 மடங்கு பெரியது. 20 எம்பையர் ஸ்டேட் கட்டடத்தை விழுங்கும் அளவுக்கு உலகின் மிகப் பெரிய கட்டடத்தை எழுப்பி வருகிறது சவுதி அரசு. சுற்றுலாவை ஈர்க்க ரியாத்தில் சுமார் ₹43 லட்சம் கோடி செலவில் 400 மீட்டர் உயரத்திற்கு எழுப்பப்பட்டு வருகிறது. ஆடம்பர ஓட்டல்கள், தியேட்டர்கள், ரூப் டாப் கார்டன்கள் என அத்தனையும் இதற்குள் இருக்குமாம். 2030க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
News April 6, 2025
வாட்ச் மேனுக்கு இவ்வளவு வருமானமா? எப்படி?

உத்தரப் பிரதேசத்தின் அலிகர் மாவட்டத்தில் வாட்ச் மேனாக பணியாற்றும் ராஜ்குமார் என்பவருக்கு ₹2.2கோடி வருமான வரி நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். மாதம் ₹5,000 மட்டுமே ஊதியம் பெறும் அவர் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது PAN எண்ணை வைத்து பல கோடிக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. எளிய மனிதர்களின் ஆதார், PAN-ஐ வைத்து நடக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன.
News April 6, 2025
RR vs PBKS மேட்சின் 3 அசாத்திய ரெக்கார்ட்ஸ்!

➥ IPL தொடரில், ஸ்ரேயாஸ் ஐயர் 50 கேட்சுகளை பிடித்துள்ளார். 119 மேட்சுகளில் விளையாடி, இச்சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
➥ ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது 50வது IPL விக்கெட்டை வீழ்த்தினார். இதுவரை 44 மேட்சுகளில், 52 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ➥ RR அணிக்காக அதிக வெற்றிகளை பெற்ற கேப்டனாக சஞ்சு சாம்சன் மாறியிருக்கிறார். 32 வெற்றிகளைப் பதிவுச் செய்து, ஷேன் வார்னே(31) சாதனையை சஞ்சு முந்தியுள்ளார்.