News August 27, 2025

புலியகுளம் விநாயருக்கு 4டன் மலர்களால் அலங்காரம்!

image

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோவில்களில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கோவை புலியகுளம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முந்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு 4 டன் மலர் மாலைகளால் சந்தன காப்புடன் ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News

News September 23, 2025

கோவை TNAU-வில் இளமறிவியல் மாணவர் சேர்க்கை 2025-2026

image

கோவை TNAU இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், TNAU-வில் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் மட்டும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான உடனடி மாணவர் சேர்க்கை (Spot Admission II) 24.09.2025 அன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயமுத்தூரில் உள்ள (அண்ணா) அரங்கத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9488635077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் என்று தெரிவித்துள்ளது.

News September 23, 2025

கோவை மாநகராட்சி மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் ரத்து!

image

கோவை மாநகராட்சியில் வாரந்தோறும் செவ்வாயன்று மேயர் ரங்கநாயகி தலைமையில் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று (செப்.23) நடைபெற இருந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நிர்வாக காரணங்களால் நடைபெறாது என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

News September 22, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (22.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!