News October 31, 2025
புலியகுளத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி சனிக்கிழமை நேரம் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கோவை, புலியகுளம் விக்னேஷ் மஹால் கல்யாண மண்டபத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது, இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று இலவச வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளனர்,மேலும் இதற்கு முற்றிலும் அனுமதி இலவசம்.மேலும் தகவலுக்கு 8072709654 அழைக்கவும். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News October 31, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (31.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
கோவையில் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க அழைப்பு!

கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கோவை மாநகர குற்ற பிரிவில் ‘செட் இ பேமெண்ட்’ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் ஆதாரமாக உள்ள ஆவணங்களுடன் கோவை மாநகர குற்றப்பிரிவு-1ல் நேரில் வந்து புகார் அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News October 31, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.01) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, வெரைட்டி ஹால் ரோடு, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம் ஒரு பகுதி, உக்கடம் ஒரு பகுதி, சுங்கம் பைப்பாஸ், ஸ்டேட் பேங்க் ரோடு, ஆட்சியர் அலுவலகம், கோவை ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


