News November 28, 2025
புறநகர் ரயிலில் சாகசம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!

நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் சென்னை புறநகர் ரயிலில், சிலர் படிக்கட்டில் தொங்குவது, ரீல்ஸ் எடுப்பது, சாகசம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், இனி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான உதவிகளுக்கு, பயணிகள் ரயில்வே உதவி எண் 139-ஐ தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 28, 2025
சென்னை: AIRPORT-ல் வேலை! APPLY NOW

சென்னைமக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் <
News November 28, 2025
BREAKING: சென்னையை நெருங்கும் டிட்வா புயல்

காலை 8.30 நிலவரப்படி டிட்வா புயல் சென்னையில் இருந்து 530 கி.மீ தொலையில் 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 30ஆம் தேதி அதிகாலை வடதமிழகம், தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News November 28, 2025
சென்னை: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!


