News November 15, 2024
புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகளால் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே, வரும் 17ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கடற்கரை – பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயங்கும். செங்கல்பட்டு, காஞ்சி, திருமால்பூர், அரக்கோணம் செல்லும் ரயில்கள் அட்டவணைப்படி இயங்கும் என சென்னை தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News March 1, 2026
சென்னை மக்களுக்கான அவசர உதவி எண்கள்!

▶காவல் கட்டுப்பாட்டு அறை – 100, ▶தீ தடுப்பு, பாதுகாப்பு – 101, ▶இலவச தாய், சேய் ஊர்தி – 102, ▶போக்குவரத்து காவலர் – 103, ▶விபத்து உதவி எண் – 108, ▶பேரிடர் கால உதவி – 1077, ▶குழந்தைகள் பாதுகாப்பு – 1098, ▶பெண்கள் பாதுகாப்பு – 181, ▶கார்ப்பரேஷன் புகார்கள் – 1913, ▶ரயில்வே முன்பதிவு விசாரணை – 132, ▶கண் வங்கி – 1919, ▶எரிவாயு – 1716, ▶BSNL – 199. ஷேர் பண்ணுங்க
News March 1, 2026
சென்னை: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

சென்னை மக்களே, கேஸ் புக்கிங்கில் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் e-KYC & OTP கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. e-KYC இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது. பாரத் கேஸ் : https://www.ebharatgas.com, இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in, ஹெச்.பி: https://myhpgas.in கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. ஷேர் பண்ணுங்க
News March 1, 2026
சென்னையில் விளம்பர பலகை

சென்னையில் அனுமதியின்றி விளம்பர பலகை வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், உரிமத்துக்கான விண்ணப்பம் அளிக்கவும், ஏற்கெனவே அமைத்த விளம்பரங்களுக்கு உரிமம் பெற விதிமீறல்களைச் சரிப்படுத்தவும் வரும் மார்ச் 6-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.


