News January 9, 2026
புயல், மழை: இன்று 7 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்

2026-ன் முதல் <<18802928>>புயல்<<>> வங்கக் கடலில் இன்று (ஜன.9) உருவாகக்கூடும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், இன்று திருவாரூர், நாகையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், பள்ளி செல்லும் மாணவர்கள் குடை, ரெயின் கோட் உள்ளிட்டவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.
Similar News
News January 10, 2026
ராசி பலன்கள் (10.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 9, 2026
பாமக போட்டியிட விரும்பும் தொகுதிகள் இவையே!

<<18785984>>NDA கூட்டணியில்<<>> பாமகவுக்கு 17 (அ) 18 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பாமக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் இதோ! திருப்போரூர், காஞ்சி, செஞ்சி, விக்கிரவாண்டி, ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை, விருத்தாச்சலம், நெய்வேலி, கும்மிடிப்பூண்டி, சோளிங்கர், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பெண்ணாத்தூர், செய்யாறு, ஆற்காடு, திருத்தணி, வானூர், பூம்புகார்.
News January 9, 2026
மக்கள் நாயகன் மறைந்தார்.. கண்ணீர் அஞ்சலி

தாய்த்திருநாட்டின் விடுதலைக்காக போராட்டக் களம் புகுந்த <<18808501>>மக்கள் நாயகன்<<>> வன்னிக்காளை(92) இன்று காலமானார். திண்டுக்கல்லைச் சேர்ந்த அந்த காந்தியவாதியின் உடலுக்கு கண்ணீருடன் மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, வன்னிக்காளையின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த விடுதலை வீரன் உலகை விட்டு மறைந்திருந்தாலும், மக்களின் உள்ளங்களில் இருந்து ஒருபோதும் நீங்குவதில்லை. SALUTE


