News December 14, 2024
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி தர நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை சரி செய்ய நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆவணங்கள், வீடுமனை பட்டா வழங்கி, மாற்று இடங்களில் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 255 மருத்துவ முகாமில் 17,000 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு, கால்நடைகளுக்கும் 13 முகாமில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
Similar News
News August 21, 2025
கிருஷ்ணகிரி: தாசில்தார், விஏஓ லஞ்சம் வாங்கினால், இதை செய்யுங்க

மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04343- 292275) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 21, 2025
இலவச இருசக்கர வாகன பழுதுநீக்கும் பயிற்சி

கிருஷ்ணகிரி கே.ஆா்.பி. அணையின் வளாகப் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் கிராமப்புற இளைஞர்களுக்கு 30 நாள்கள் இலவச இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்குதல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர் நாளை (ஆக. 23) தேதிக்குள் அலுவலகத்திற்கு நேரில் சென்று இப்பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.
News August 21, 2025
உங்களுடன் ஸ்டாலின் கட்டுரைப் போட்டி!

2021ம் ஆண்டிற்கு பின் தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்கள் குறித்து ‘உங்களுக்கு பிடித்த திட்டம்’ என்ற தலைப்பில் ஒருப்பக்க கட்டுரை போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் வெற்றிப்பெறுபவர்களுக்கு அமைச்சர் சாமிநாதன் பரிசுகளை வழங்க உள்ளார். விருப்பமுள்ளவர்கள் கட்டுரைகளை செப்.20க்குள் ungaludanstalincamp@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு புகைப்படம் (அ) PDF-ஆக அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்