News November 7, 2025
புன்முறுவல் அரசியே மானஸா!

தெலுங்கு வரவான மானஸா செளத்ரி, ‘ஆர்யன்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தடம் பதித்துள்ளார். பயண ஆர்வலரான இவர், சமீபத்தில் வரலாற்று சிறப்புமிக்க கோல்கொண்டா கோட்டையில் கேஷுவலாக போட்டோஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை மானசா SM-ல் பதிவிட்டுள்ள நிலையில், அவரது புன்முறுவலுக்கு ரசிகர்கள் அடிக்ட் ஆகியுள்ளனர். கனவு கன்னியாக மாறப் போகும் மானஸாவின் போட்டோக்களை SWIPE செய்து பாருங்கள்.
Similar News
News February 1, 2026
பெண்கள், தொழில்துறைக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்: PM

140 கோடி மக்களுக்கான வளர்ச்சியடைந்த பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். 2027-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்கான அடித்தளமாக மத்திய பட்ஜெட் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தொழில்துறைக்கு சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
News February 1, 2026
சினிமா இயக்குநர் கோபிநாத் நாராயணசாமி தற்கொலை

‘கோ’, ‘அவள்’, ‘இவன் தந்திரன்’ உள்ளிட்ட படங்களில் துணை இயக்குநராக பணியாற்றிய கோபிநாத் நாராயணசாமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ‘கோதையின் குரல்’ என்ற குறும்படத்தை இயக்கியதன் மூலம் கவனம் பெற்ற அவர், புதிதாக தெலுங்கு படம் ஒன்றையும் இயக்கியுள்ளார். அந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், குடும்ப பிரச்னை, நிதி நெருக்கடி காரணமாக சென்னை கூவம் ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது பெரும் சோகம்.
News February 1, 2026
மோடி அரசின் வளர்ச்சிக்கான பட்ஜெட்: அமித்ஷா

வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை முன்னெடுப்பதற்கான மோடி அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு பிறகு மோடியின் தொலைநோக்கு பார்வை பொருளாதாரத்தை முன்னேற்றியுள்ளதாகவும், அனைத்து துறைகளின் வளர்ச்சியும் பட்ஜெட்டில் தென்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த பட்ஜெட் நிதிப்பற்றாக்குறையை 4.5% குறைவாக வைத்திருக்கும் இலக்கை நிறைவேற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.


