News March 27, 2024

புனித வெள்ளி: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

புனித வெள்ளியை முன்னிட்டு விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் இருந்து பல்வேறு ஊருக்கு செல்ல ஏதுவாக நாளை (மார்ச் 27) கூடுதலாக 240 பஸ்களும், மார்ச் 28இல் 80 பஸ்களும், மார்ச் 29இல் 240 பஸ்களும் என மொத்தம் 660 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே பயணிகள் https://www.tnstc.in/home.html என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். 

Similar News

News February 11, 2026

விழுப்புரம் கலெக்டர் அறிவித்தார்!

image

விழுப்புரம் கோட்ட விவசாயிகள் குறை கேட்கும் கூட்டம் வரும் பிப்.18ஆம் தேதி காலை நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் ஆர்டிஓ தலைமையில் நடைபெறும் இந்தல் கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணைநல்லூர், கண்டாச்சிபுரம் தாலுக்கா விவசாயிகள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

News February 11, 2026

விழுப்புரத்தில் துடிதுடித்து பலி!

image

செஞ்சியை அடுத்த பெருங்காயப்பூர் கோட்டிக்கல், பாறை பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி(50). தொழிலாளியான இவர், நேற்று முன் தினம் இரவு பெருங்கப்பூர் கூட்டுரோடு அருகே சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற தனியார் பஸ், அவர் மீது மோதியதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, அவர் ஏற்கனவே இறந்ததாகத் தெரிவித்தனர்.

News February 11, 2026

விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(பிப்.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிகள் நடைபெற உள்ளன. DSP தலைமையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். பொதுமக்கள் அவசர உதவிக்கு வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!