News July 10, 2025
புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

காஞ்சிபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,
புத்த, சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்து புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், அறிவிப்பு, விண்ணப்பத்தை மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகத்தில் 30.11.2025க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய அறிவிப்பு. மேலும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த தகவலை பகிரவும்.
Similar News
News July 10, 2025
காஞ்சியிலிருந்து சிறப்பு பேருந்துகள்

இன்று ஜூலை 10ஆனி மாத பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரத்திலிருந்து தி.மழைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக காஞ்சிபுரம் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பயணியர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் திரளான பக்தர்கள் நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.
News July 10, 2025
காஞ்சியில் கடைகளுக்கு சீல்

காஞ்சிபுரம் மாநகராட்சியில், 5,000க்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்கள், உணவகங்கள், பெரிய தொழில் அமைப்புகள் இயங்குகின்றன. இவற்றில் 2,000க்கும்
தொழில் உரிமம் பெற புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில், 2,000க்கும் அதிகமானோர் தொழில் உரிமம் கூட இல்லாமல், கடை நடத்துகின்றனர். உரிமம் பெறாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News July 10, 2025
பிரசித்திபெற்ற பெருமாள் கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நித்திய கல்யாண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பெருமாளுக்கு 365 நாளும் திருக்கல்யாணம் நடக்கும் சிறப்பான கோயிலாகும். மேலும் இந்த பெருமாளை வந்து தரிசித்தால் சொந்தமாய் வீடு கட்டுவதர்க்கான பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் திருமண தடையும் அகலும் என்பது ஐதிகமாக இருக்கிறது. வீடு கட்ட காத்திருக்கும் உங்கள் நன்பர்களுக்கு பகிரவும்.