News October 29, 2024
புத்தாநத்தம் அருகே விபத்தில் தாய் பலி

புத்தாநத்தம் அடுத்த இடையபட்டியைச் சேர்ந்த தனலட்சுமி இன்று காலை அவரது மகனுடன் டூவீலரில் சென்று கொண்டிருந்த போது பிள்ளையார்கோவில்பட்டி அருகே விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மகன் காயம் அடைந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த புத்தாநத்தம் போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News August 5, 2025
திருச்சி மாவட்டம் 3-ம் பிடித்து அசத்தல்

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் நடப்பாண்டு 1-ஆம் வகுப்பில் மட்டும் 2,75,459 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இந்நிலையில் மாணவா் சோ்க்கை அடிப்படையில் 8,571 மாணவா்களுடன் தென்காசி மாவட்டம் முதலிடத்தையும், 8000 மாணவா்களுடன் திண்டுக்கல் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 7,711 மாணவா்களுடன் திருச்சி மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
News August 5, 2025
திருச்சி: ஒரே ஆண்டில் 245 பேர் மரணம்!

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. கடந்த 2023-ம் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 1,806 சாலை விபத்துகளில் 555 பேர் பலியாகினர். அதுபோல 2024-ம் ஆண்டில் நடைபெற்ற 1,922 சாலை விபத்துகளில் 633 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 2025-ம் ஆண்டு மே மாதம் வரை நடந்த 763 விபத்துகளில் 245 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. SHARE !
News August 5, 2025
கரூர் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கும்

திருச்சியிலிருந்து கரூர் செல்லும் பேருந்துகளை திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தற்காலிகமாக இயக்கலாம் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சப்பூர் பேருந்து நிலையம் துவக்கிய நாள் முதல் அனைத்து பேருந்துகளும் பஞ்சப்பூர் சென்ற நிலையில் கரூர் செல்லும் தனியார் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கின. இதுதொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.