News January 1, 2026

புத்தாண்டு: முதலில் யாருக்கு? கடைசியில் யாருக்கு?

image

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் புத்தாண்டு கொண்டாடப்படுவது கிடையாது. பூமி 24 முக்கிய நேர மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால், இடத்திற்கேற்ப புத்தாண்டு பிறக்கும் நேரமும் மாறுபடும். அதன்படி, புத்தாண்டு முதலில் பிறப்பது (IST 3.30PM, டிச.31) கிரிபதி தீவில் தான்! இதேபோல், புத்தாண்டை கடைசியாக வரவேற்பது (IST 4.30PM, ஜன.1) அமெரிக்க சமோவா. இது, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தீவு!

Similar News

News January 8, 2026

ஜனநாயகன் ரீலீஸ் இல்லை.. அபிஷியல் அறிவிப்பு

image

ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை ஜன.9-ம் தேதி ரிலீஸ் செய்யமுடியவில்லை என்றும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், ரசிகர்களின் ஆதரவே படக்குழுவுக்கு மிகப்பெரிய பலம் என்றும் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது

News January 8, 2026

ராசி பலன்கள் (08.01.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News January 8, 2026

ஷாக் கொடுத்ததா ICC? வங்கதேசம் மறுப்பு

image

T20 WC தொடரில் இந்தியாவில் நடக்கவிருக்கும் போட்டிகளை மாற்ற கோரி வங்கதேசம் ICC-க்கு கடிதம் எழுதியிருந்தது. ஆனால், அதை <<18785386>>ICC<<>> நிராகரித்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், அந்த செய்திகளில் உண்மையில்லை என வங்கதேசம் மறுத்துள்ளது. மேலும், தங்களது கோரிக்கை தொடர்பாக ICC உடன் சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தங்களுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!