News December 31, 2025
புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 1544 போலீசார்

குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமுறைகளை மீறி வாகன சாகசங்களில் ஈடுபடுபவர்கள் ANPR கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் புத்தாண்டை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1544 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 1, 2026
குமரி: மது என நினைத்து மருந்து குடித்தவர் பலி!

மேல கரும்பாறையைச் சேர்ந்தவர் செல்வின் குமார் (48). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இவர் போதையில் மது என நினைத்து களைக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்ததாக கூறப்படுகிறது. ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்து போனார். இது தொடர்பாக கொற்றிக்கோடு போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 1, 2026
குமரி: Driving Licence-க்கு முக்கிய Update!

குமரி மாவட்ட மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<
News January 1, 2026
குமரி அருகே இளைஞர் அடித்துக் கொலை

கன்னியாகுமரி அருகே சுண்டன் பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (34). இவர் செப்டிக் டேங்க் கிளீனிங் செய்யும் தொழில் செய்து வந்தார். நேற்று இவர் வீட்டில் இருந்து வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. லீபுரம் கடற்கரையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவரது உடலை கன்னியாகுமரி போலீசார் கைப்பற்றி, அடித்து கொலை செய்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


