News December 31, 2025
புத்தாண்டு கொண்டாட்டம் மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை

2026-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31-ம் தேதி இரவு 9 மணிமுதல் வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், உணவகங்கள் உட்பட பல்வேறு பொதுமக்கள் கூடும் இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த வாகனச்சோதனை பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் காமினி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 9, 2026
திருச்சி – ஜோத்பூர் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

திருச்சி – ஜோத்பூர் ரயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்பட உள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருச்சி – ஜோத்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயிலில், வரும் 10-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 8, 2026
திருச்சி: கூட்டுறவு பணியாளர் நாள் கூட்டம் அறிவிப்பு

கூட்டுறவு துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கான, பணியாளர் நாள் கூட்டம், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகத்தில் நாளை (ஜன.9) நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கூட்டுறவு ஒன்றிய சார்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
News January 8, 2026
திருச்சியைக் காக்கும் அம்மன்

திருச்சியில் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் ஆறு கண் பாலம் அருகே அமைந்துள்ளது குழுமாயி அம்மன் கோயில். கிராம மக்கள் குழி வெட்டும்போது இந்த அம்மன் தோன்றியதால் குழுமாயி அம்மன் என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. சோழர்களின் குல தெய்வமாக வணங்கப்பட்ட குழுமாயி அம்மன் தற்போது திருச்சி நகர காவல் தெய்வமாக விளக்குகிறார். இந்த கோயிலில் குட்டிக்குடி திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இதனை SHARE பண்ணுங்க.


