News December 22, 2025
புத்தாண்டு கொண்டாட்டத்தில் குழந்தைகளுக்கு கட்டுப்பாடு

எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் 2025 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குழந்தைகள் அழைத்துவரப்பட்டதாக புகார் மனு ஒன்று சென்னை HC-ல் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், புத்தாண்டில் மது அருந்தும் இடத்துக்கு குழந்தைகளை அழைத்து வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதுபோன்று புகார் வந்தால் அரசு உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
Similar News
News December 23, 2025
கணவரை கிரைண்டரில் அரைத்த மனைவி

உ.பி.,யில் காதலனுடன் சேர்ந்து கணவனை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மனைவி கைதாகியுள்ளார். நவ.,18 அன்று காதலனுடன் மனைவி தனிமையில் இருப்பதை பார்த்த கணவன் கௌரவுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. முதலில் கணவன் காணாமல் போனதாக போலீசில் புகாரளித்து ரூபி (மனைவி) நாடகமாடியிருக்கிறார். பிறகு சந்தேகத்தின் பேரில் மனைவியிடமே போலீஸ் விசாரிக்க, 27 நாள்கள் கழித்து உண்மை வெளிவந்திருக்கிறது.
News December 23, 2025
அதிகாலையில் கைது… பரபரப்பு!

தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்து கொண்டிருந்தபோது ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. இன்னொரு பக்கம், தடை செய்யப்பட்ட கச்சத்தீவு அருகே மீன் பிடித்ததால் 49 மீனவர்கள் நம் நாட்டின் கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இப்பிரச்னைக்கு எப்போது விடிவுகாலம் பிறக்குமோ என மீனவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
News December 23, 2025
மாயமான டிரம்ப் போட்டோ மீண்டும் வந்தது!

USA-வை உலுக்கி கொண்டிருக்கும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து, சமீபத்தில் <<18628502>>டிரம்ப்பின் போட்டோ<<>> நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், USA நீதித்துறை மீண்டும் அந்த போட்டோவை இணையதளத்தில் சேர்த்துள்ளது. அந்த போட்டோவில் டிரம்ப் உடன் இருந்த பெண்களில், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருக்கிறார்களா என ஆய்வு செய்யவே படம் தற்காலிகமாக நீக்கப்பட்டதாக நீதித்துறை விளக்கமளித்துள்ளது.


