News December 29, 2025
புத்தாண்டில் வரிசை கட்டும் கார்கள் இவைதான்!

புத்தாண்டை முன்னிட்டு, 2026 ஜனவரியில் முன்னணி கார் நிறுவனங்கள் தங்களது புது மாடல்கள் மற்றும் அப்டேட்டட் வேரியண்ட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளன. அடுத்த தலைமுறை பெட்ரோல் SUV-கள் முதல் எலக்ட்ரிக் கார்கள் வரை, பல மாடல்கள் விற்பனைக்கு வரிசை கட்டியுள்ளன. அந்த கார் மாடல்களின் போட்டோக்களை மேலே தொகுத்துள்ளோம். அதை Swipe செய்து பாருங்க.
Similar News
News December 29, 2025
தமிழ் சினிமா பிரபலம் கிருஷ்ணசாமி காலமானார்

பிரபல ஆவணப்பட தயாரிப்பாளர் முனைவர் S.கிருஷ்ணசாமி(88) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். ‘இண்டஸ் வேலி டு இந்திரா காந்தி’ ஆவணப்படம் மூலம் புகழ்பெற்ற இவருக்கு, 2009-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி பல ஆவணப்படங்களை தயாரித்துள்ள கிருஷ்ணசாமி, தமிழ் சினிமாவில் பல வரலாற்று படங்களிலும் பணிபுரிந்துள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News December 29, 2025
திமுக Vs தவெகவுக்கு இதில் தான் போட்டி: அண்ணாமலை

கிறிஸ்துமஸ் விழாக்களில் CM ஸ்டாலின் கலந்துகொண்டதை பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக கிறிஸ்துமஸ் விழாவுக்கு திமுக முதலில் செல்வதா, தவெக முதலில் செல்வதா என்பதில் தான் போட்டி இருந்ததாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும் PM மோடி தேவாலயம் சென்றதை சுட்டிக்காட்டிய அவர், ஆனால் பாஜகவை இவர்கள் மதவாத கட்சி என்கின்றனர் எனவும் சாடினார்.
News December 29, 2025
நயன், த்ரிஷாவை முந்த நினைக்கிறாரா ரஷ்மிகா?

PAN இந்தியா அளவில் வேகமாக பிரபலமடைந்துள்ள நடிகைகளில் ஒருவர் ரஷ்மிகா மந்தனா. தெலுங்கு, ஹிந்தி என அடுத்த ஆண்டு இவரது படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன. இந்நிலையில், தன்னுடைய மார்க்கெட் உயர்ந்திருப்பதால் ஒரு படத்திற்கு ₹10 கோடிக்கு மேல் சம்பளம் வேண்டும் என அவர் கேட்பதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக நடிகைகள் த்ரிஷா, நயன்தாரா வாங்கும் சம்பளங்களே ₹12 கோடியை தாண்டவில்லை என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.


