News January 1, 2026
புத்தாண்டில் வந்த சோகம்.. 128 பேர் பலி!

2025-ல் உலகளவில் 128 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு(IFJ) கவலை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக இஸ்ரேல்-பாஸ்தீனப் போரில் மட்டும் 56 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தற்போது உலகம் முழுவதும் 533 பத்திரிகையாளர்கள் சிறையில் உள்ளனர். இதுவெறும் புள்ளிவிவரம் அல்ல, இது நமது சக ஊழியர்களுக்கான உலகளாவிய அபாய எச்சரிக்கை என IFJ தெரிவித்துள்ளது.
Similar News
News January 25, 2026
தவெக கூட்டணி: விஜய் முன்னிலையில் KAS கூறினார்

விஜய் உடன் இணைந்த பிறகு தான் செல்லும் இடமெல்லாம் செல்பி எடுக்க பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி; அது தவெகவால் மட்டுமே முடியும் என்றார். மேலும், கூட்டணி இல்லை என கவலை வேண்டாம்; தமிழகம் முழுவதும் நமக்கு மக்களின் ஆதரவு அமோகமாக உள்ளதால் வெற்றி உறுதி என்றார். உங்கள் கருத்து என்ன?
News January 25, 2026
திமுகவுக்கு இறுதி தேர்தல்: EPS

4-ல் ஒரு பங்கு வாக்குறுதியை கூட திமுக அரசு நிறைவேற்றாததால், அனைத்து தரப்பு மக்களும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளதாக EPS சாடியுள்ளார். சென்னை சூளைமேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது எனவும், வரும் தேர்தல் தான் அவர்களுக்கு கடைசி தேர்தல் என்றும் விமர்சித்தார். மேலும், தங்களது கூட்டணியில் மேலும் சில கட்சிகள் ஓரிரு நாள்களில் இணைய உள்ளதாகவும் தெரிவித்தார்.
News January 25, 2026
மேலும் ஒரு இந்து இளைஞர் தீ வைத்து எரிப்பு!

இந்துக்கள் கொல்லப்படுவது வங்கதேசத்தில் தொடர்கதையாகி வருகிறது. மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வந்த சன்சல் பவுமிக்(23), கடந்த 23-ம் தேதி எரித்து கொல்லப்பட்டுள்ளார். இரவு கடையை மூடிவிட்டு கிளம்பும் போது, அவர் மீது தீ வைத்த சிலர் கடைக்குள் தள்ளி ஷட்டரை மூடியுள்ளனர். இதில், சன்சல் துடிதுடித்து மரணமடைந்துள்ளார். இது திட்டமிட்ட கொலை என சன்சலின் குடும்பத்தினரும் உறவினர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.


