News April 13, 2025
புத்தாண்டில் இங்கு வழிபாட்டால் பிரச்சனைகள் வராது !

தமிழ் புத்தாண்டு அன்று இந்துக்கள் முக்கிய ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் புத்தாண்டு அன்று வழிபாடு செய்ய சிறந்த கோயில் ஆறுமுக மங்கலத்தில் உள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோயில் என்று ஆன்மீகச் சான்றோர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் எழுப்பப்பட்ட முதல் விநாயகர் கோயில் என்ற பெருமையை பெற்ற இக்கோயிலில் வழிபாடு செய்தால் குடும்ப பிரச்சனை, வழக்கு பிரச்சனைகள் இருக்காது என்பது ஐதீகம்.
Similar News
News February 1, 2026
தூத்துக்குடி : தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 1, 2026
கோவில்பட்டி: தேரோட்டத்தில் தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் தேருக்கு தடி தடுப்பு போட்டு வந்த கழுகுமலையை சேர்ந்த சப்பாணி முத்து (70) என்பவர் கிழக்கு பஜார் பகுதியில் தேர் வந்த போது தடி போட முயன்றுள்ளார். அப்போது தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கழுகுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 1, 2026
தூத்துக்குடி: பேருந்தில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு

தமிழக அரசு பேருந்துகளில், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது, அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!


