News July 30, 2024

புத்தளத்தில் ஆக.3ல் சிறப்பு மருத்துவ முகாம்

image

தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஆகஸ்ட் 3ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜாக்கமங்கலம் ஒன்றியம், புத்தளம் L.M.P.C மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடக்கிறது.
முகாமில் சிறப்பு மருத்துவர்களால் நோய் கண்டறியப்பட்டு அதற்குரிய சிகிச்சைகள் வழங்கப்படும். பொதுமக்கள் இந்த இலவச முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மீனா இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News August 15, 2025

குமரியில் விநாயகர் சிலைகளை 10 இடங்களில் கரைக்கலாம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் கன்னியாகுமரி, சொத்த விளை, சின்ன விளை, சங்குத்துறை, வெட்டுமடை, தேங்காய்ப்பட்டணம், மிடாலம் கடற்கரைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் பள்ளிக்கோணம், அணைக்கட்டு, திற்பரப்பு அருவி, தாமிரபரணி ஆறு போன்ற இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அரசு அனுமதித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 15, 2025

குமரி இளைஞர்களே, அரசு இலவச பயிற்சி.. வேலை ரெடி!

image

குமரி இளைஞர்களே, தமிழக அரசு வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் 8-வது முதல் டிகிரி வரை எந்த படிப்பு முடித்திருந்தாலும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை உறுதி செய்து வருகிறது. TN Skill என்ற இணையதளத்திற்கு சென்று ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல் முதல் ஐடி துறை வரை பல்வேறு பயிற்சிகளை தேர்வு செய்து கொள்ளலாம். பெரும்பாலான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பை உறுதி செய்யும் இத்தகவலை SHARE பண்ணுங்க.

News August 15, 2025

பாலமோரில் 22.4 மில்லி மீட்டர் மழை பதிவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாலமோரில் 22.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குழித்துறையில் 21.2 மி.மீ, பேச்சிப்பாறை 19.8 மி.மீ, ஆனைக்கிடங்கு 17.2 மி.மீ, சுருளோடு 16.4 மி.மீ, திற்பரப்பு 14.8 மி.மீ, சிற்றாறு ஒன்று 14.4 மி.மீ, சிவலோகம் 14.2 மி.மீ, பெருஞ்சாணி 13.8 மி.மீ, புத்தன் அணை 11.2 மி.மீ, களியலில் 10.2 மி.மீ.மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!