News November 22, 2024
புத்தக விற்பனை குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வு புத்தகங்கள் விற்பனை குறித்து திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் திருநெல்வேலி டவுனில் உள்ள மீனாட்சிபுரம் முனிசிபல் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்த புத்தகங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Similar News
News August 13, 2025
BREAKING: கவின் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில் மேலும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சுர்ஜித்தின் உறவினர் ஜெயபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தந்தை மகன் இருவர் கைதான நிலையில் மூன்றாவதாக கைது செய்யப்பட்டுள்ள ஜெயபாலன் ஆகிய மூவரும் உடற் பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பின் அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளனர்.
News August 13, 2025
நெல்லை மாவட்டத்தில் மதுபான கடைகள் மூடல்

சுதந்திர தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுக்கடை கள் (டாஸ்மாக்) இம்மாதம் 15ம் தேதி மூடப்படும் என ஆட்சியர் இரா.சுகுமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்படுவதாக தெரிவித்தார்.
News August 13, 2025
BREAKING: நெல்லை ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு

நெல்லை மனோன்மணியம் பல்கலைகழகத்தில் இன்று ஆளுநர் தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பட்டம் பெற மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக செயல்பட்டு வருவதாக மாணவி குற்றச்சாட்டு. ஆளுநர் பட்டம் பெற மறுத்து அந்த மாணவி துணைவேந்தரிடம் பட்டம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.