News January 6, 2026
புத்தக கண்காட்சிக்கு இலவச அனுமதி!

சென்னை, நந்தனம் YMCA மைதானத்தில் வரும் 8ம் தேதி, பபாசி நடத்தும் 49வது புத்தக கண்காட்சி தொடங்குகிறது. இதை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த புத்தக கண்காட்சியில் 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. வழக்கமாக பார்வையாளர்களிடம் ரூ.10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், நடப்பாண்டில் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
Similar News
News March 9, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச்.9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 9, 2026
சென்னை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <
News March 9, 2026
வேளச்சேரி – பரங்கிமலை ரயில் சேவை மீண்டும் தள்ளிவைப்பு!

பரங்கிமலை – வேளச்சேரி இடையிலான ரயில் சேவை நாளை முதல் தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தண்டவாளத்தில் சில சிறிய அளவிலான சிவில் & எலக்ட்ரிக்கல் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என ஆய்வுக்குழு அறிவுறுத்தியுள்ளது. இதனால் நாளை தொடங்க வேண்டிய சேவை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை தள்ளிப்போயிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.


