News March 31, 2025

புத்தகத் திருவிழாவில் ரூ.1 கோடிக்கு புத்தகம் விற்பனை

image

ராமநாதபுரம் மாவட்ட நிருவாகம், கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் சார்பில் 7வது புத்தகத் திருவிழா மார்ச் 21 அன்று தொடங்கியது. 10 நாள் நடைபெற்ற திருவிழா நேற்று மாலை நிறைவடைந்தது. இந்த 10 நாள் திருவிழாவில் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. ரூ.1 லட்சத்திற்கு மேல் புத்தகம் வாங்கிய வாசகர்களுக்கு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பரிசுகளை வழங்கினார்.

Similar News

News April 2, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (ஏப்ரல்.01) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News April 1, 2025

செகந்திராபாத் – ராமநாதபுரம் வார ரயில் ஏப்.30 வரை நீட்டிப்பு

image

செகந்திராபாத் – ராமநாதபுரம் (வ.எண் 07695) வாராந்திர ரயில் சேவை புதன் கிழமைகளில் (விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி) வழியாக நாளை (ஏப்.02) முதல் ஏப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் – செகந்திராபாத் வாராந்திர ரயில் வெள்ளிக்கிழமைகளில் (வ.எண் 07696) ஏப்.4 முதல் மே 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News April 1, 2025

பிரதமர் வருகை – மீன் பிடிக்க தடை  

image

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்.6ல் திறந்து வைக்க உள்ளார். இதன் பாதுகாப்பு கருதி மண்டபம் விசைப் படகுகள், நாட்டுப் படகுகளுக்கு ஏப். 4, 5, 6ல் மீன்பிடி அனுமதி சீட்டு நிறுத்த கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தல் படி 3 நாட்களுக்கு மீன் பிடி அனுமதிச்சீட்டு நிறுத்தப்படுகிறது. இவ்வாறு மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!