News December 17, 2025
புது வாழ்வளித்த CSK-வுக்கு நன்றி.. நெகிழ்ந்த சர்பராஸ்!

2015-ல் குறைந்த வயதில் IPL-ல் விளையாடியவர்(17 வருடம் 177 நாள்கள்) என்ற பெருமையை பெற்ற சர்பராஸ் கான் பல ஏற்ற இறக்கங்களை கண்டவர். பல அணிகள் மாறி, Fitness இல்லை என்ற ஓரங்கட்டப்பட்டவர், உடல் எடையை குறைத்து 2025 SMAT தொடரில் அசத்தலான ஃபார்மில் உள்ளார். ஒரு சான்ஸ் கிடைக்காதா என காத்திருந்தவரை, CSK வாங்கியுள்ளது. இதனால், புது வாழ்வளித்த CSK-வுக்கு நன்றி’ என அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 22, 2025
பெர்னாட் ஷா பொன்மொழிகள்

*நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு பெருஞ்சுமை ஆகிவிடும்.
*உயிருள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன். உழைக்க உழைக்க எனக்கு உயிர் வாழும் விருப்பம் அதிகமாகிறது.
*பணம் பசியைத்தான் போக்கும். துன்ப உணர்ச்சியை போக்காது.
*எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எங்கே செய்ய வேண்டும் என அறிந்திருப்பவரே நல்ல தலைவர்.
News December 22, 2025
பள்ளிகளில் வகுப்புவாதம் கூடாது: கேரள அரசு

கேரளாவின் சில தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸை கொண்டாட பல கட்டுப்பாடுகளை விதித்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், பள்ளிகளை எப்போதும் வகுப்புவாத ஆய்வகங்களாக மாற்ற அனுமதிக்கப்பட மாட்டாது என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஓணம், கிறிஸ்துமஸ், ரம்ஜான் ஆகிய பண்டிகைகளை அனைத்து பள்ளி மாணவர்களும் கொண்டாடுவதால், அது அவர்களுக்கு அன்பை கற்றுக்கொள்ள உதவுகிறது என்றார்.
News December 22, 2025
U 19: விழா மேடை ஏறாத இந்திய அணியினர்

ஆடவர் <<18075095>>ஆசிய கோப்பையை<<>> அடுத்து, U-19 ஆசிய கோப்பையிலும், இந்தியா – பாக்., இடையேயான மோதல் நீடித்துள்ளது. டிராஃபியை வெற்றி பெற்ற பாக்., அணிக்கு, அந்நாட்டைச் சேர்ந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்ஷின் நக்வி வழங்கியது மட்டுமல்லாமல், வீரர்களுடன் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டார். ஆனால், மேடை கூட ஏறாத இந்திய அணியினர், ICC இணை உறுப்பினர் முபாஷிர் உஸ்மானியிடம் இருந்தே மெடல்களை பெற்றனர்.


