News November 17, 2025
புது புது Course-களை இலவசமாக கற்க வேண்டுமா?

இன்றைய காலக்கட்டத்தில் பல திறமைகள் இல்லையென்றால் பிழைப்பை ஓட்டமுடியாது. இதனால் பியூச்சரை நினைத்து கவலைப்பட வேண்டாம். உங்கள் திறமைகளை வளர்க்க Hubspot Academy இணையதளத்தில் பல Course-கள் இலவசமாக கிடைக்கின்றன. இதில் Digital Marketing, SEO Strategy, content creation போன்ற பயனுள்ள Course-கள் பல உள்ளன. வீடியோ வடிவில் பாடங்கள் அப்லோடு செய்யப்பட்டிருப்பதால் கற்பதற்கும் எளிதாக இருக்கும். SHARE.
Similar News
News November 17, 2025
சவுதி பஸ் விபத்து அதிர்ச்சி அளிக்கிறது: ஜெய்சங்கர்

சவுதி அரேபியாவில் நடந்த <<18308684>>பஸ் விபத்தில்<<>> 42 இந்தியர்கள் இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக EAM ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரியாத் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
பாஜகவுக்கு ஆயுதங்களை சப்ளை செய்யும் கவர்னர்: MP

மேற்கு வங்கத்தில் TMC தொண்டர்களை அழிக்க கவர்னர் ஆனந்த போஸ், ஆயுதங்களை பாஜகவினருக்கு வழங்குகிறார் என மே.வங்க MP கல்யாண் பானர்ஜி பேசியுள்ளார். கவர்னர் மாளிகையில் கிரிமினல்களுக்கு அடைக்கலம் கிடைப்பதாகவும், இதையெல்லாம் நிறுத்த வேண்டும் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், கல்யாண் மன்னிப்பு கேட்கவில்லை எனில் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என கவர்னர் எச்சரித்துள்ளார்.
News November 17, 2025
BREAKING: அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார்

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் EPS-ஐ தமிழ் மாநில காங்., தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அதிமுக தலைமையிலான NDA கூட்டணியை உறுதிசெய்த வாசன், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசித்துள்ளார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், NDA கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வரவிருப்பதாகவும், 2026-ல் பிஹாரில் வென்றதை விட அதிக இடங்களில் NDA வெற்றிபெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


