News January 13, 2026

புது சட்டம் அமலுக்கு வரும் முன்பே விலை உயர்வு!

image

புதிய கலால் திருத்த மசோதா வரும் பிப்.1-ல் அமலுக்கு வர உள்ளது. அதன்படி, <<18461895>>சிகரெட்<<>> உள்ளிட்ட புகையிலை பொருள்களுக்கான வரி பல மடங்கு உயர்த்தப்பட உள்ளது. ஆனால், இந்த சட்டம் அமலுக்கு வரும் முன்பே பல்வேறு பகுதிகளில் சிகரெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது. மொத்த வியாபாரிகள் பதுக்க தொடங்கி, குறைந்த அளவில் மட்டுமே விற்பனைக்கு அனுப்பவதால், அனைத்து வகையான புகையிலை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

Similar News

News February 9, 2026

PM மோடிக்கு தைரியமில்லை: பெண் MP-க்கள் கடிதம்

image

PM மோடியை தாக்க காங்கிரஸ் பெண் MP-க்கள் முயற்சித்ததாக, சபாநாயகர் ஓம் பிர்லா வைத்த குற்றச்சாட்டு பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என காங். பெண் MP-க்கள் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும் எதிர்கட்சிகளின் கேள்விகளை எதிர்கொள்ள தைரியமில்லாமலேயே PM அவைக்கு வரவில்லை என்றும் இது ஒரு பயத்தின் வெளிப்பாடு எனவும் பெண் MP-க்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

News February 9, 2026

திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர் நீலோபர்

image

வாணியம்பாடி அதிமுகவைச் சேர்ந்த Ex அமைச்சர் நீலோபர், திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக 2021-ல் அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தற்போது, அதிமுக நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வந்தாலும், கே.சி.வீரமணிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதாம். இதனால், பிப்.14 அன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

News February 9, 2026

டிகிரி போதும்.. ₹56,100 சம்பளம்!

image

UPSC-ல் IAS, IPS, ரயில்வே, தபால் துறைகளின் மூலம் 933 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 21- 32 *கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி *தேர்ச்சி முறை: Preliminary and Main Examination & Personality Test *சம்பளம்: ₹56,100- ₹1,32,000 வரை *வரும் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும் *வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!