News January 19, 2026
புதுவை: SI உடற்தகுதி தேர்வு அறிவிப்பு

புதுவையில் 70 சப்-இன்ஸ்பெக்டர் (SI) பணிக்கான உடற்தகுதி தேர்வு ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் இன்று (19-1-26) தொடங்கி பிப்.7-ம் தேதி வரையில் நடக்கிறது. இதில் ஆண்களுக்கு இன்று முதல் பிப்.3-ம் தேதி வரையும், பெண்களுக்கு பிப்.4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையும் தேர்வு நடக்கிறது. இதில் தகுதி பெறுவோருக்கு வருகிற பிப்.22-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 18, 2026
புதுச்சேரி: சிலிண்டருக்கு கூடுதல் பணமா?

புதுச்சேரி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
News February 18, 2026
புதுவை: பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல்!

புதுவையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, ரவி அண்ணாமலை என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் ரவி அண்ணாமலையை அழைத்து, எச்சரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரவி அண்ணாமலை, அந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி மிரட்டல் விடுத்துள்ளார். தற்போது இது குறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 18, 2026
புதுச்சேரியில் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை

புதுச்சேரி பாகூர் கொம்யூன், பனித்திட்டு சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் மீனவர் தர்மசீலன். இவரது மகன் பிரித்விராஜ் ஐ.டி.ஐ படிப்பை முடித்துவிட்டு கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பிரித்விராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


