News December 5, 2025
புதுவை: BE போதும் அரசு வேலை ரெடி!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
Similar News
News December 5, 2025
புதுச்சேரி: பொதுப்பணி துறையினருக்கு பதவி உயர்வு

புதுச்சேரி முதலமைச்சர் ஆணைக்கிணங்க, பொதுப்பணித்துறையில் பணிபுரியும் பொறியாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலான பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நீண்ட நாட்களுக்குப் பிறகு, 44 இளநிலைப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்கு பதவி உயர்வுக்கான ஆணையினை முதலமைச்சர் ரங்கசாமி நேற்று சட்டப்பேரவையில் வழங்கினார்.
News December 5, 2025
புதுவை: மது குடித்த ஆசிரியர் உயிரிழப்பு

புதுவை கந்தப்ப முதலியார் தெருவைச் சேர்ந்தவர் தனியார் பள்ளி ஆசிரியர் சார்லஸ் எடிசன்(57). இவரது மனைவி ஆரோக்கிய மேரி. இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். சார்லஸ் எடிசனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மதுகுடித்த அவர் கருவடிக்குப்பம் அருகே உள்ள மதுபானக்கடையில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், லாஸ் பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 5, 2025
கடலோர காவல்படை கமாண்டர் புதுச்சேரி வருகை

புதுச்சேரி வந்திருந்த இந்திய கடலோர காவல்படை கிழக்கு பிராந்திய கமாண்டர் தந்த்விந்தர் சிங் சைனி நேற்று உப்பளம் துறைமுகத்தில் உள்ள கடலோர காவல் படை உள்கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, கவர்னர் கைலாஷ்நாதன், தலைமை செயலர் சரத் சவசாள் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். டிருதி. தசிலா, இந்திய கடலோர காவல்படை, காரைக்கால் கமாண்டர் சந்தோஸாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


