News October 20, 2025

புதுவை: வெளுத்து வாங்க போகும் மழை!

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுவை மற்றும் காரைக்கலில் ஓரிரு பகுதிகளில் வரும் அக்.20 (இன்று), அக்.21 (செவ்வாய்க்கிழமை), அக்.22 (புதன்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 20, 2025

புதுச்சேரி: கவர்னருடன் முதல்வர் சந்திப்பு

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை நேற்று முதல்வர் ரங்கசாமி சந்தித்தார். அப்போது பொன்னாடை போற்றி, பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்வின் அரசு அலுவர்கள், ஆளுநர் மாளிகை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் உடன் இருந்தனர்.

News October 20, 2025

புதுவை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை!

image

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>bankofbaroda.ban<<>>k.in எனும் இணையதளத்தில் வரும் அக்.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.

News October 20, 2025

புதுவை: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் பேட்டி

image

புதுவை சட்டப்பேரவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், சோகோ நிறுவனத்தின் குழு, புதுவைக்கு வந்து ஆய்வு செய்துள்ளது. சமூக பங்களிப்பின் மூலம் பட்டம் படித்த மாணவர்களுக்கு தொழில் சார்ந்த திறன் பயிற்சி அளிப்பதற்கு குவாண்டம் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. விரைவில் அந்த நிறுவனம் மூலம் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி ஆரம்பிக்கப்பட இருக்கிறது’ என தெரிவித்தார்.

error: Content is protected !!