News December 24, 2025

புதுவை: விபத்தில் சிக்கிய முதியவர்!

image

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் (67) என்பவர் நேற்று முன்தினம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்குச் செல்வதற்காகத் திருநள்ளாறு – அம்பகரத்தூர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஸ்கூட்டர் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில், காரைக்கால் வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 27, 2025

புதுவை: திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் கலெக்டர் ஆய்வு

image

காரைக்கால், திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக உள்ளதா என, கலெக்டர் ரவிபிரகாஷ் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். மேலும், காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 27, 2025

புதுச்சேரி: உதவித்தொகை உயர்வு அறிவிப்பு

image

புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். குடும்பத்தலைவிகளுக்கு அரசு வழங்கி வரும் ரூ.1,000 உதவித் திட்டம், ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு விரைவில் வழங்கப்படும். மேலும், கோதுமை போல் 1 கிலோ கேழ்வரகு மாவு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

error: Content is protected !!