News October 29, 2025
புதுவை: வாக்காளர் திருத்தப்பணி அறிவிப்பு

“புதுவையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் வீடு, வீடாக கணக்கெடுப்பு பணி வரும் 4-ம் தேதி துவங்கி, டிசம்பர் 4-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. டிசம்பர் மாதம் 9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டு 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.” என தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 29, 2025
புதுவை: துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு

புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் துறையில் துணை தாசில்தார்களாக பணியாற்றி வரும் ரமேஷ், சைஜூ, மணிகண்டன் நம்பூதரி, முருகையன், நித்தியானந்தம் ஆகிய 5 பேருக்கும் தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டரும், வருவாய் துறை சிறப்பு செயலாளருமான குலோத்துங்கன் பிறப்பித்துள்ளார்.
News October 29, 2025
புதுவை: 12th போதும் ரயில்வே வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…
News October 29, 2025
புதுச்சேரி: வேரோடு சாய்ந்த 20 மரங்கள்

புதுச்சேரி, ஏனாமில் மோன்தா புயலால் நேற்று (அக்.28) காலை முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் 20 மரங்கள் வேரோடு சாய்தன. இதனால் ஏனாம் முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார் இணைந்து சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். மேலும் ஏனாமில் நேற்று காலை வரை மோன்தா புயலால் 4.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.


