News April 3, 2024

புதுவை வருகிறாா் பிரதமா் மோடி

image

புதுவை இந்திரா காந்தி சிலை சதுக்க பகுதியில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவா் செல்வகணபதி எம்.பி.நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இந்தத் தோ்தலில் நமச்சிவாயம் வென்றால் அவர் மத்திய அமைச்சராகும் வாய்ப்புள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்துக்காக புதுவைக்கு வருகிறாா். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தேதி விரைவில்அறிவிக்கப்படும்” என கூறினார்.

Similar News

News February 7, 2026

புதுச்சேரியில் நர்சிங் மாணவி மாயம்

image

புதுச்சேரி மாநிலம் தருமபுரி கலைமகள் நகரைச் சேர்ந்த முருகவேலின் மகள் மோகனப்பிரியா (19), நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற இவர், வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

News February 7, 2026

புதுச்சேரி: இன்று இங்கெல்லாம் மின்தடை!

image

காரைக்கால் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக இன்று (07.02.2026) காலை 10.00 மணி முதல், மதியம் 2.00 மணி வரை மின்தடை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரவு குட்டை வீதி, ஆனை பிள்ளை மறைக்கர் வீதி, கால்மாட்டு வீதி, காதர் சுல்தான் வீதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று உதவி பொறியாளர் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News February 7, 2026

புதுச்சேரியில் குறை தீர்வு நாள் முகாம் அறிவிப்பு

image

புதுச்சேரி டிஜிபி சாலினி சிங் உத்தரவுபடி, ஒவ்வொரு சனிக்கிழமையும் அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி 7ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற உள்ளதாக, சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

error: Content is protected !!