News January 3, 2026
புதுவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்!
Similar News
News January 3, 2026
புதுவை: BE படித்தோருக்கு ரிசர்வ் வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் இன்ஜினியர் & நிபுணர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 93
3. வயது: 21-41
4. சம்பளம்: ஆண்டுக்கு ரூ.3.10 லட்சம் முதல் ரூ. 4.80 லட்சம் வரை
5. கல்வித் தகுதி: BE / B.Tech / M.Tech
6. கடைசி தேதி: 06.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 3, 2026
புதுவை: செவிலியர் பணி தேர்வு பட்டியல் வெளியீடு

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 226 செவிலியர் அதிகாரி பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆன்லைன் மூலம் 4,714 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, இட ஒதுக்கீடு விதிகளைப் பின்பற்றி தற்காலிகப் பட்டியல், காத்திருப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு கல்லூரி இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
News January 3, 2026
புதுவை: போலீஸ் உடல் தகுதி தேர்வு-66 பேர் தேர்வு!

புதுச்சேரியில் போலீஸ் பணிக்கான உடல் தகுதித் தேர்வு கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று 500 பேர் அழைக்கப்பட்டதில், 279 பேர் மட்டுமே பங்கேற்றனர். 221 பேர் ஆப்சென்ட் ஆகினர். மேலும் நேற்று நடந்த உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வுகளில் 279 பேரில், 66 பேர் மட்டுமே அடுத்த மாதம் நடைபெறவுள்ள எழுத்துத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.


