News January 11, 2025

புதுவை முதல்வர் இளைஞர் தின வாழ்த்து

image

இளைஞர்கள், தங்களது ஆற்றல், வலிமை மற்றும் படைப்பாற்றலினால் எதையும் வெல்ல முடியும். மாற்றத்திற்கான மகத்தான சக்தியாக விளங்கும் இளைய சமுதாயத்தை ஊக்குவிப்போம் என்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அனைவருக்கும் தேசிய இளைஞர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Similar News

News January 11, 2025

புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு HMPV பாதிப்பு

image

புதுச்சேரியை சேர்ந்த ஐந்து வயது சிறுமி காய்ச்சல் காரணமாக கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது இரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவருக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் தொற்று இல்லை என்று சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் தற்போது ஒருவருக்குக்கு தொற்று என்ற செய்தி வந்துள்ளது.

News January 11, 2025

தமிழகத்திற்கு கடத்த முயன்ற 2,388 மது பாட்டில்கள் பறிமுதல்

image

உருளையன்பேட்டை போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது, வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சந்திப்பு அருகே சந்தேகத்திடமாக நின்றிருந்த ஸ்கார்பியோ காரை சோதனை செய்தனர். காரில் 80 அட்டை பெட்டிகளில் ரூ. 2.86 லட்சம் மதிப்புள்ள 2,388 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. நாமக்கல்லைச் சேர்ந்த சுரேஷ் டிரைவரை போலீசார் நேற்று கைது செய்து, மதுபான பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

News January 11, 2025

புதுச்சேரியில் கடந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் குறைவு

image

புதுச்சேரி சீனியர் எஸ் பி கலைவாணன் நேற்று கூறும் பொழுது புதுச்சேரியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த அவசர கால உதவிக்கு பயன்படுத்தும் 4 வாகனங்களும் ரோந்து பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். அனைத்து போலீஸ் நிலையத்திலும் பீட், மொபைல் பேட்ரோல் தீவிரப்படுத்தப்படும். கடந்த ஆண்டு 2023 ஆண்டை காட்டிலும் கடந்த ஆண்டு கொலை, வழிப்பறி குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது என்று தெரிவித்தார்