News July 18, 2024
புதுவை முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியைச் சேர்ந்த 199 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்ச ரூபாய் வீதம், மொத்தம் ரூ.1.99 கோடி திருமண நிதி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் ரங்கசாமி தனது சட்டப்பேரவை அலுவலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இந்தத் தொகையானது அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். மேலும் இதில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன் குமார், துறை இயக்குநர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Similar News
News August 13, 2025
புதுச்சேரி மக்களே இந்த நம்பரை SAVE பண்ணுங்க!

புதுச்சேரியில் மருத்துவ தேவைகளுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம். ▶️ புதுச்சேரி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை – 0413-2274552, ▶️ காரைக்கால் பொது மருத்துவமனை – 04368-222450, ▶️ மருத்துவ அலுவலர் 04368-222593, ▶️ பொது மருத்துவமனை – மகப்பேறு-04368-223917. அவசர உதவிக்கு மட்டும் அழைத்து பயன் பெறலாம். SHARE பண்ணுங்க
News August 13, 2025
புதுவையில் சோலார் விழிப்புணர்வு முகாம்

புதுவை தவளக்குப்பம் சுபமங்கள ஹாலில் நாளை (ஆக.14) காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை சோலார் திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. இத்திட்டம் மூலம் வீட்டின் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க 1 கிலோ வாட்ஸ்க்கு ரூ.30 ஆயிரமும், 2 கிலோ வாட்ஸ் ரூ.60 ஆயிரமும் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது. மேலும் விபரங்களுக்கு 9489080373, 9489080374 தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
News August 13, 2025
மசாலா பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

புதுவை குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, புதுவையை சேர்ந்த 18 முதல் 45 வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஊறுகாய் வகை, வத்தல் வகை, அப்பளம் வகை, மாசாலா பொடிகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 88704 97520, 0413-2246500 எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.