News December 3, 2024
புதுவை மீனவர்கள் இன்று முதல் கடலுக்குச் செல்ல அனுமதி

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக புதுவை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை கடந்த 25ஆம் தேதி அறிவித்தது. தமிழக மற்றும் புதுவை கடலோர மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் எச்சரிக்கை ஏதும் நேற்று (டிச.2) விடுக்கப்படவில்லை. எனவே, புதுவை மீனவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லலாம் என புதுவை மீன்வளத் துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் கூறினார்.
Similar News
News September 13, 2025
புதுச்சேரியில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இன்று(செப்.13) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
News September 12, 2025
டென்னிஸ் விளையாடிய முதக்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டி இன்று கோரிமேடு என்.ஆர் டென்னிஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி டென்னிஸ் விளையாடி போட்டியினை தொடங்கி வைத்தார். மேலும் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள் முதலமைச்சர் ரங்கசாமிக்கு பூங்கொத்துக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
News September 12, 2025
புதுவை EX CM பொய் பேசுவதை நிறுத்த வேண்டும்!

புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், EX CM நாராயணசாமியின் தவறான பொய் குற்றச்சாட்டுகளுக்கு அரசின் சார்பில் பதில் அளிக்காததால், தொடர்ந்து பொய் பேசுவதையே வழக்கமாக நாராயணசாமி கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தனது 5ஆண்டு கால திமுக.காங் கூட்டணி ஆட்சியையும் தற்போதைய தேசிய ஜனநாயக ஆட்சியையும் நாராயணசாமி ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது நல்லது என தெரிவித்துள்ளார்.