News September 24, 2025
புதுவை: மின் நுகர்வோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு இன்று முதல் நாளை 25.09.2025 ஆகிய தேதியில் same day Seva திட்டத்தின் கீழ் மின் விண்ணப்பம் பெறப்பட்ட, பெறப்படும் அதே நாளில் மாலை 6:00 மணிக்குள் மின் இணைப்பு வழங்கப்படும். இதில் விண்ணப்பம் காலை 11 மணிக்குள் ஆன்லைன் மூலமாக பதியப்பட்டு அந்த விண்ணப்பம் ஆனது உதவிப் பொறியாளர் நகரம்-2 அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றனர்.
Similar News
News September 24, 2025
புதுச்சேரி: வங்கியில் வேலை APPLY NOW!

புதுச்சேரி மக்களே, கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News September 24, 2025
புதுவை போக்குவரத்து போலீசுக்கு அதிநவீன வாகனங்கள்

புதுவை மாநிலத்தில் காவல்துறை நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 2 அதிநவீன வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதில் ஒரு வாகனம் தெற்கு பகுதி போலீஸ் நிலையத்திற்கும், ஒரு வாகனம் வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் நவீன தானியங்கி கேமரா, ஸ்பீடு கன், வாகன ஓட்டிகள் குடித்து விட்டு வாகனம் ஓட்டுகின்றனரா என்பதை கண்காணிக்கும் கருவியும் உள்ளது.
News September 24, 2025
வணிக வளாகத்தில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி

கடலூர் சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ‘பிராவிடன்ஸ் மால்’ தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைப்பது என்பது குறித்து, மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி இளங்கோ, உதவி அதிகாரி லட்சுமணன் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்த ஒத்திகையின் போது ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.