News October 19, 2025
புதுவை: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

புதுவை, வில்லியனூர் கணுவாபேட்டை சேர்ந்தவர் சதாம்உசேன்(24). கட்டிட தொழிலாளியான இவர் நஜ்மல்ஆலம்(35), என்பவர் வீட்டில் டைல்ஸ் பதிக்கும் வேலை செய்த போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 21, 2025
புதுச்சேரி: ஆளுநருக்கு நேரில் தீபாவளி வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதருக்கும் அவரது துணைவியாருககும், ராஜ் பவனில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். துணைநிலை ஆளுநர் சட்டப்பேரவை தலைவருக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
News October 20, 2025
புதுச்சேரி: மத்திய அரசு நிறுவனத்தில்..சூப்பர் வேலை!

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வயது: 18 வயது பூர்த்தி
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6. இத்தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News October 20, 2025
புதுச்சேரி: கவர்னருடன் முதல்வர் சந்திப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை நேற்று முதல்வர் ரங்கசாமி சந்தித்தார். அப்போது பொன்னாடை போற்றி, பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்வின் அரசு அலுவர்கள், ஆளுநர் மாளிகை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் உடன் இருந்தனர்.