News October 17, 2024
புதுவை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

புதுவை சென்டாக்கில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் மூன்றாவது கட்ட கலந்தாய்வு விரைவில் நடக்க உள்ளது. அப்போது ஜிப்மரில் இடம் கிடைத்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட உள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் மாணவர்கள் தெரிவிக்கலாம் என்று சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா நேற்று தெரிவித்தார். ஷேர் செய்யவும்
Similar News
News July 8, 2025
புதுவை: சீருடை பணியாளர்கள் நிலுவை படி குறித்து அறிவிப்பு

புதுச்சேரி அரசு நிதித்துறை செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதுவை அரசின் 7-வது ஊதிய குழுவின் படி சீருடை பணியாளர்களுக்கு, சீருடை உள்ளிட்ட பல்வேறு படிகளை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதுவை காவல்துறை மற்றும் ஊர்காவல் படையினருக்கு 1.7.2017 முதல் 31.3.2021 வரை நிலுவையில் உள்ள சீருடை படி வழங்கப்பட உள்ளது.” என தெரிவித்துள்ளார்.
News July 8, 2025
“விரைவில் ஆதார் அடிப்படையில் இலவச அரிசி” – அமைச்சர் தகவல்

காரைக்காலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன், “அரசின் இலவச அரிசியானது உரியவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்.வேறு யாரும் இதனால் ஆதாயம் அடையக் கூடாது என்ற நோக்கில் ஆதார் அடிப்படையில் அரசின் இலவச அரிசியானது வழங்க உத்தேசிக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
News July 8, 2025
புதுச்சேரி: மணல் லாரி மோதி பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் ஊசுடு ஏரிபகுதியில் ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் அருகில் காலை 8 மணி அளவில் மணல் ஏற்றி வந்த லாரி, அவ்வழியே தந்தையோடு பள்ளிக்கு சென்ற இரண்டு மாணவர்களின் மீது மோதியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இரண்டு மாணவர்களும் உயிரிழந்தனர். இதனால், அந்த மானவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் 3 மணி நேரம் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.