News December 12, 2025
புதுவை: மருத்துவக் கல்லூரியில் சேர அவகாசம்

புதுவையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு முதல் சுற்று இட ஒதுக்கீடு பட்டியலை சென்டாக் வெளியிட்டது. அதன்படி 283 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் 11-ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த கால அவகாசம் தற்போது 13-ம் தேதி மாலை 5மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 14, 2025
புதுவை: போதை பொருள் கடத்திய 2 பேர் கைது

புதுவை கரையாம்புத்தூரில், 65 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருள் பிடிபட்டது. காவல்துறை வாகன தணிக்கையில் சொகு சுகாரில் இருந்த 4 பேர் தப்பியோட முயன்ற போது 1-வர் மட்டும் பிடிபட்ட நிலையில், கிருஷ்ணகிரியில் இருந்து கடத்திவரப்பட்ட போதை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில் பிடிபட்ட நபர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 2 பேரை கைது செய்து, 1 சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News December 14, 2025
புதுச்சேரி: தேசிய விருது பெற்ற கலைஞருக்கு உற்சாக வரவேற்பு

கைவினை கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய விருது, இந்த ஆண்டு புதுச்சேரி முத்துப்பிள்ளை பாளையம் பாரம்பரிய கைவினை கலைஞர் மோகன்தாசுக்கு, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார். தேசிய விருது பெற்ற புதுவை திரும்பிய மோகன்தாசுக்கு, உழவர்கரை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் மற்றும் கைவினை கலைஞர்கள் சங்கம் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.