News March 19, 2024

புதுவை: மதுபானக் கடைகளை இரவு 10 மணிக்கு மூட உத்தரவு

image

புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து வகையான மதுபானக் கடைகளும், இரவு 10.00 மணிக்கு மூட வேண்டும் என புதுச்சேரி கலால்துறை சார்பில் உத்தரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறும் மதுபான கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்க்கப்பட்டுள்ளது.

Similar News

News October 24, 2025

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேட்டி

image

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் புனரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்காவை முதலமைச்சர் ரங்கசாமி இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது, குழந்தைகள் மகிழ்ச்சிக்காக சிறுவர்கள் ரயில், மின்சார கார் நீர்வீழ்ச்சி என விதவிதமாக அமைக்கப்பட்டுள்ளது.
தாவரவியல் பூங்கா ஒரு பூங்காவாக மட்டுமில்லாமல், அறிவு சார்ந்த இடமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று பெருமிதமாக தெரிவித்தார்.

News October 24, 2025

புதுச்சேரி: ரூ.30,000 சம்பளத்தில்..ரயில்வேயில் வேலை!

image

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள 64 Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
1.கல்வி தகுதி: பட்டப்படிப்பு
2.சம்பளம்: ரூ.30,000/-
3.வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
4.தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட உள்ளனர்
5.மேலும் விபரங்களுக்கு இங்கே <>க்ளிக் <<>>செய்யவும்
இதனை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News October 24, 2025

புதுவை: ஸ்மார்ட் மின் மீட்டர் பொறுத்தும் பணி தீவிரம்

image

புதுவையில் பிரதமரின் இலவச சூரிய ஒளி மின் திட்டத்தில், வீடுகளில் சோலார் பேணல்கள் பொறுதி மின்சாரம் பெற்று வருகின்றனர். இதற்கு ஸ்மார்ட் மின் மீட்டர் பொறுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று (அக்.23) மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, கோயிலில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டது. மேலும் 18 மாதத்தில் அனைவருக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!