News December 20, 2025
புதுவை: போலீஸ் உடற்தகுதி தேர்வு தேதி அறிவிப்பு

புதுச்சேரி, காவல்துறையில் காலியாக உள்ள போலீஸ் பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்ப அறிவிப்பு ஆணை கடந்த ஆகஸ்டு 12-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 9,932 விண்ணப்பங்கள் ஏற்றுக்கப்பட்டன. இந்நிலையில் இதற்கான உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் 12-ம் தேதி கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நடக்க உள்ளது என காவல்துறை சிறப்பு பணி அதிகாரி ஏழுமலை தெரிவித்துள்ளார்.
Similar News
News December 21, 2025
புதுச்சேரி ஜிப்மருக்கு தேசிய விருது

தேசிய அளவில் சான்றுகள் அடிப்படையிலான சுகாதார கொள்கைகளுக்கு ஜிப்மரின் தொடர்ச்சியான செயல்பாடு மற்றும் பங்களிப்புகளுக்கு தேசிய அளவிலான விருது கிடைத்துள்ளது. நிதி ஆயோக் உறுப்பினர் பால், தேசிய சுகாதார ஆராய்ச்சி துறையின் செயலாளர் ராஜீவ் பாகல் ஆகியோர் டெல்லியில் நடைபெற்ற விழாவில் ஜிப்மரின் சுகாதார தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்திற்கு இந்த தேசிய விருதை நேற்று வழங்கினர்.
News December 21, 2025
புதுச்சேரி: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734, Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221, Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க!
News December 21, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

வீட்டிலிருந்தே சமூக வலைதளங்கள் மூலமாக அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும் பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்குகிறோம் என்றும் ஆசை வார்த்தைகள் கூறினால் அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும், உங்கள் வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்வதாக கூறி வாட்ஸ் ஆப் மூலமாக ஏதேனும் லிங்க், மெசேஜ் வந்தால் அதனை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.


