News September 24, 2025

புதுவை: போலீசார் சார்பில் ஓவியப்போட்டி அறிவிப்பு!

image

புதுச்சேரி காவல் துறையின் எழுச்சி நாள் (அக்டோபர் 1) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி போக்குவரத்து போலீசார் சார்பில் புதுவை காவலர், புதுவை காவலன் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெறுகிறது. ஆர்வ முள்ளவர்கள் மேற்கண்ட தலைப்பில் ஓவியங்களை வரைந்து தங்களின் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண்ணுடன் அருகில் உள்ள காவல் நிலையங்களில் வருகிற 29ஆம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள் ளப்படுகிறார்கள்.

Similar News

News September 24, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சட்டப்பூர்வமான லாட்டரி நிறுவனம் பரிசுத்தொகையை வெளியிடுவதற்கு எந்த விதமான பணத்தையும் கோருவதில்லை. மேலும், இதுபோன்ற எந்தவொரு கூற்றுகளையும் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் இல்லாமல் பணத்தை செலுத்த வேண்டாம். புதுச்சேரியில் லாட்டரி முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது ஆகையினால் லாட்டரி என்ற பெயரில் பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்.” என எச்சரித்தனர்.

News September 24, 2025

புதுவை: போலீஸ் லைசன்ஸ் கேட்டா இத செய்ங்க!

image

புதுவை மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் மறந்துட்டீங்களா? கவலை வேண்டாம்! உடனே <>இங்கே கிளிக் செய்து<<>> Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை உங்கள் போனில் ஈஸியா பெறலாம். இந்த டிஜிட்டல் ஆவணங்களை அதிகாரப்பூர்வம் என்பதால், போலீசாரிடமும் லைசன்ஸை, ஆர்.சி புக் டிஜிட்டல் ஆவணங்களை காண்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

News September 24, 2025

புதுவை: மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது

image

புதுவை காட்டேரிக்குப்பம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது சுத்துக்கேணி, விவசாய நிலம் அருகே வாலிபர் ஒருவர் நின்று கொண்டு கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்துள்ளார். அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் சுத்துகேணியைச் சேர்ந்த சாரதி என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 34 கிராம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!