News December 19, 2025

புதுவை: போலியோ சொட்டு மருந்து முகாம் அறிவிப்பு

image

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் டிசம்பர் 21-ம் தேதி காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதன் மூலம் 74,698 குழந்தைகள் பயனடைவார்கள். மொத்தம் 425 முகாம்களிலும், பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், பூங்கா, கோவில், வணிக வளாகம் உள்ளிட்ட 31 பொது இடங்களிலும் முகாம்கள் நடத்தப்படும் என புதுச்சேரி சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Similar News

News December 21, 2025

புதுச்சேரி: புதிய டோல் பிளாசா துவக்கம்

image

விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே மதகடிப்பட்டு அருகில் ஒரு டோல் பிளாசா இருக்கின்றது. இந்த பட்சத்தில் எதிர்வரும் டிசம்பர் 24ஆம் தேதி முதல் பாகூர் அருகில் சேலியமேடு வருவாய் கிராமம் அருகில், தேசிய நெடுஞ்சாலையில் மற்றொரு புதிய டோல் பிளாசா கட்டண வசூல் துவங்க இருப்பதாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை பார்த்து பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

News December 21, 2025

புதுச்சேரி: போலியோ முகாமை தொடக்கி வைத்த முதல்வர்

image

புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கப்பட்டது. இந்த முகாமை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். குழந்தைகள் அனைவரும் போலியோ நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக, 5 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளார்.

News December 21, 2025

புதுச்சேரி: டிகிரி போதும் வங்கியில் வேலை!

image

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: வருடம் ரூ.6,20 லட்சம்
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 23.12.2025
7.மேலும் தகவலுக்கு: <>CLICK<<>> HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!